விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த வித கதாபாத்திரத்திலும் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றார்.
இருப்பினும் அவரின் சமீபத்திய சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. எனவே தற்போது
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில்
காத்துவாக்குல ரெண்டு காதல்
படத்தை மிகவும் நம்பியுள்ளார் விஜய் சேதுபதி.
மீண்டும் மோதலில் விஜய் – அஜித்..! வெற்றி யாருக்கு ?
அனிருத்
இசையில்
நயன்தாரா
மற்றும்
சமந்தா
நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி சிம்புவின்
போடா போடி
படத்தைப்பற்றி பேசியுள்ளார்.
சிம்பு நடிப்பில் விக்னேஷ் ஷிவனின் முதல் படமான போடா போடி திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. காமெடி கலந்த காதல் படமாக வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் இப்படம் பற்றி பேசிய விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.
அப்படத்தை பார்த்துவிட்டு அவருடன் பணியாற்ற வேண்டும் என விரும்பினேன். மேலும் இப்படம் இந்த கால இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே போடா போடி படத்தை ஹிந்தியில் எடுக்கச்சொல்லி அடிக்கடி விக்னேஷ் சிவனை வலியுறுத்துவேன் என்றார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சில நாட்களில் வெளியாகவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.