சேலம்: சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து, கொடூரமாக கொலை செய்த இளைஞனுக்கு சேலம் மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு. இவர்களின் கடைசி மகள் ராஜலட்சுமி வயது 13. இவர் சம்பவத்தன்று அந்த அந்த பகுதியை சேர்ந்த நெல்அறுவடை இயந்திர ஓட்டுனர் தினேஷ் குமார் என்பவன் தனது வீட்டிற்கு, பூ கட்டுவதற்கு நூல் கேட்டு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு இளைஞர் தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக அங்கு சென்று தினேஷ் குமாரை தடுக்க முயன்ற நிலையில், அவன் தாயை கீழே தள்ளிவிட்டுவிட்டு, சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற தினேஷ்குமார்,. பின்னர் ஆத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான்.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தினேஷ் குமார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, நேற்று தினேஷ்குமார் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற கொடூரன் தினேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை தூக்குத் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.