விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம் இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது 16 வயது மகளைக் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய திமுக ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் நீதி கேட்டுச் சென்ற பொழுது தங்களைத் தாக்கிய திமுக தலைவரின் உறவினர்களையும் உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க முயன்ற தாய்.
தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை.
இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க @BJP4TamilNadu தயங்காது!
3/3
— K.Annamalai (@annamalai_k) April 26, 2022
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தமிழக பாஜக தயங்காது” என்று அந்த செய்திக்குறிப்பில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.