சென்னை: பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை இயக்கியதால் ரயில் விபத்து – காவல்துறை தகவல்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதற்கு ரயில் ஓட்டுநரே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை எண் ஒன்றில் எடுத்து வரப்பட்ட மின்சார ரயில் சரியாக நேற்று முன்தினம் மாலை 4.25 மணி அளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. விடுமுறை தினம் என்பதால் நடைமேடையில் பொதுமக்கள் கூட்டம் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறது. மேலும் 11 பணியாளர்கள் அந்த நடைமேடையில் தூய்மைப் பணி மேற்கொண்டு வந்துள்ளனர். உடனடியாக நடைமேடையில் இருந்து விலகும்படி ஓட்டுநர் ஷங்கர் சத்தமிட்டதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களும் விலகிக் கொண்டுள்ளனர்.
image
இந்த விபத்தில் யாருக்கும் காயமுமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. விபத்திற்குள்ளான ரயிலை 9 மணி நேரம் போராடி மீட்டு நடைமேடையில் நிறுத்தினர். மேலும் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான முதல் பெட்டி மற்றும் இரண்டாம் பெட்டியை தவிர்த்து இதர பெட்டிகளை அகற்றி பணிமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு இன்ஜின் மூலம் மீட்டனர்.
இந்த விபத்து தொடர்பான ஓட்டுநர் ஷங்கர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. விசாரணையில், பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை தவறுதலாக ஓட்டுநர் இயக்கியதால் ரயில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.