இயக்குனர்
செல்வராகவன்
மற்றும்
கீர்த்தி சுரேஷ்
நடிப்பில் உருவாகியுள்ள ‘
சாணிக்காயிதம்
‘ படத்தின்
ட்ரைலர்
வெளியாகியுள்ளது.’
ராக்கி
‘ படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவின் கவனம் ஈர்த்துள்ள இயக்குனர்
அருண் மாதேஸ்வரன்
இயக்கத்தில் ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் உருவாகி உள்ளது.
இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஸ்க்ரீன் சீன்
நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின்
பர்ஸ்ட் லுக்
வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
நடிகர் விமல் அளித்த பண மோசடி புகார்.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி கைது!
ராக்கி படத்தைப் போலவே இந்தப் படமும் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை உள்ள கதைக்களமாக உருவாகியுள்ளது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது. சமீபத்தில் ‘சாணிக்காயிதம்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
படத்தில் செல்வராகவன் சங்கையா என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் பொன்னி என்ற கதாபத்திரத்திலும் நடித்துள்ளனர். ட்ரைலரில் இருவரும் தாங்கள் இருவரும் செய்த கொலைகள் எத்தனை என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
ட்ரைலர் முழுவதும் ரத்தம் தான். கதையின் அனைத்து பக்கங்களும் ரத்தத்தினால் எழுதப்பட்டது போல வன்முறை விஞ்சி நிற்கிறது. ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.மே 6-ம் தேதி இந்தப் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!