தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் சம்பந்தமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக சட்டபேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இருக்க கூடிய 6215 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், 15,000 விற்பனையாளர்கள் மற்றும் 3000 விற்பனையாளர்கள் உள்ளிட்ட 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு, இந்த ஏப்ரல் மாதம் 2022 ஆண்டு முதல் ஊதியத்தில் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று, அறிவிப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
இந்த சம்பள உயர்வு காரணமாக ஆண்டொன்றுக்கு 16 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார துறை சம்பந்தமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக அறிவிப்பாக தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருந்த போதிலும், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ஒரு தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.