சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை Twitter , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கிற்கு Elon Musk. விற்பனை செய்வதற்கு அதன் பணிப்பாளர் சபை உடன்பட்டுள்ளது.
மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், தற்போது 44 பில்லியன் டாலருக்கு நிறுவனத்தையும் வாங்க ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எலோன் மஸ்க் பேச்சு சுதந்திரம் பற்றி ஒரு ட்வீட் பதிவை மேற்கொண்டுள்ளார். அதில் அவர் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்று பதிவு செய்த எலான் மஸ்க், ட்விட்டர் ஒரு டிஜிட்டல் டவுன் சதுக்கம், மனிதநேயத்தின் பார்வையில் முக்கியமான எதிர்கால பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.