திமுக உட்கட்சித் தேர்தல் – நகர செயலாளர் பதவிக்கு 3 தரப்பினர் இடையே போட்டி.. விருப்ப மனு வாங்க வந்த இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு

திமுக உட்கட்சி தேர்தலில் திருப்பத்தூர் நகர செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு வாங்க வந்த இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவருக்கு மண்டை உடைந்தது.

தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு ஜோலார்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அங்கு நகர செயலாளர் பதவிக்கு போட்டியிட வந்த இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதில், பொறுப்பாளர் அலுவலகத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டு, சூறையாடப்பட்டதோடு, எம்.எல்.ஏ. நல்லதம்பி முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், பொருளாளர் ஸ்ரீதர் என்பவருக்கு மண்டை உடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இருவர் தரப்பிலும் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.