துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே இருக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இன்றுவரை ஆளுநருக்கே உள்ளது.
ஆளுநர் தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர் . சட்டத்தை திருத்துவதற்கும் , மாற்றுவதற்கும் , புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு.
இருப்பினும் கல்வியில் அரசியல் கலக்க கூடாது என்பதற்காகதான் இந்த அதிகாரம் ஆளுநர்ருக்கு வழங்கப்பட்டுள்ளது .
எனவே , ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே தொடர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.