கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டாலே அது சார்ந்த நோய்களும் படையெடுக்கத் தொடங்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் குறித்த தெளிவு இருந்தால், அவை தாக்காமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
கோடைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் சார்பில் `கோடைக்கால நோய்கள்…தப்பிப்பது எப்படி’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைனில் ஏப்ரல் 30-ம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் சர்க்கரைநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
கோடைக்காலத்தில் என்னென்ன நோய்கள் பாதிக்கும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி, நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதனைக் கையாள்வது எப்படி, சர்க்கரைநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் கோடைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்.
இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் அவர் நேரடியாக பதில் அளிப்பார். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.