பிரபல மலையாள இயக்குநரான
சத்யன் அந்திகாட்
இயக்கிய மனசினக்கரே படம் மூலம் நடிகையானவர்
நயன்தாரா
. பத்திரிகை ஒன்றில் வந்திருந்த நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து அவரை அணுகியிருக்கிறார்.
டயானா மரியம் குரியன் என்கிற பெயரை மாற்றி நயன்தாரா என்று பெயர் வைத்ததும் சத்யன் தான். ஆனால் நயன்தாராவை நடிக்க அழைத்தபோது, எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறிவிட்டாராம்.
பின்னர் மெதுவாக பேசி அவரை நடிக்க வைத்திருக்கிறார் சத்யன். இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா என்ன தான் லேடி சூப்பர் ஸ்டாரானாலும் தன்னடக்கமாக இருக்கிறார். எனக்கு அவ்வப்போது போன் செய்து பேசுவார் என்கிறார் சத்யன்.
என்ன தான் பெரிய ஆளானாலும் தலைவி எப்பவுமே பழசை மறக்காதவர் என்கிறார்கள் நயன்தாரா ரசிகர்கள். இதற்கிடையே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்: ஆனால்…
அஜித்தின் ஏ.கே. 62 பட வேலையை துவங்கும் முன்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம் விக்னேஷ் சிவன். நயன்தாரா,
விக்னேஷ் சிவன்
திருமணத்தை பார்க்கத் தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்பொழுது தலைவியை திருமணம் செய்வீர்கள் அன்பான இயக்குநரே என விக்னேஷ் சிவனிடம் அடிக்கடி கேட்கிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.