நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநரிடம் ஒப்புதலை கேட்கவில்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கும் அவரது வேலையை செய்தால் போதும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 21 நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொண்டார். அதன் நிறைவு விழா பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியை எக்காலத்திலும் சமரசத்துக்கு இடம் அளிக்காமல் வழிநடத்துவேன் என்றும் திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலாக உள்ளதாகவும் கூறினார். கல்வி, வேலைவாய்ப்பு, சமத்துவத்தில் தமிழினம் முன்னேறிக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read: “திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது” – முதல்வர் ஸ்டாலின் பேச்சுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM