நைஜீரிய குண்டுவெடிப்பு; இருவருக்கு போலீஸ் வலை| Dinamalar

அபுஜா : நைஜீரியாவில், 100 பேரை பலி வாங்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக, இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதனால் அந்நாட்டு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.இந்நிலையில், அந்நாட்டின் இமோ மாகாணத்தில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 22ம் தேதி இரவு வெடி குண்டு வெடித்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த நிலையம் வெடித்து சிதறியது. இதில், அங்கு பணியாற்றி கொண்டிருந்த 100 தொழிலாளர்கள் பலியானதாக கூறப்படுகிறது. உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. குண்டு வெடிப்புக்கு காரணமான இருவரை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.