நொய்டா: பாரில் மது அருந்திவிட்டு பில் கட்டுவதில் எழுந்த தகராறு – 30 வயது இளைஞர் உயிரிழப்பு

நொய்டாவிலுள்ள ஒரு பிரபல பாரில் மது அருந்திவிட்டு பில் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 30 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவிலுள்ள கார்டன் கல்லேரியா மாலில் அமைந்துள்ள Lost Lemons restro பாரில் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரஜேஷ் என்ற நபர் ட்ய்ஹனது சக ஊழியர்களுடன் பார்ட்டிக்காக பாருக்கு சென்றுள்ளார். அங்கு பில் செலுத்துவதில் பார் ஊழியருக்கும் பிரஜேஷுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் பிரஜேஷ் பலமாக தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த பிரஜேஷை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
image
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நொய்டா கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ரன்விஜய் சிங் கூறுகையில், பாரின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 12க்கும் அதிகமான பார் ஊழியர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.