விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. அந்தவகையில் ரசிகர்களை பொறுத்தவரை, கலக்க போவது யாரு சீசன் 5 மிகவும் ஸ்பெஷல். இதில் தான் அறந்தாங்கி நிஷா- பழனி காம்போ, சரத்- தீனா காம்போ, முல்லை-கோதண்டம் காம்போ, குரேஷி என ஒரு காமெடியன் பட்டாளமே ரசிகர்களை வயிறு வலிக்க வலிக்க சிரிக்க வைத்தது.
இன்று சுந்தரி சீரியலில் நடித்து பிரபலமான கேப்ரியல்லாவும், இந்த சீசனில் ஒரு போட்டியாளராக இருந்தவர் தான். இந்நிலையில் சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில், கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய கேப்ரில்லா தனது நடிப்பிற்கும், விருதுக்கும் அம்மா மற்றும் அம்மாச்சி தான் காரணம் என மேடையில் கண்கலங்கினார்.
இந்நிலையில் கேபி’ தனது இன்ஸ்டாகிராமில் கணவர் ஆகாஷ் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து’
கேப்ரியல்லா: “பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல உன் பேர சொல்ல மறந்துட்டேன்….பதட்டத்துல”
ஆகாஷ்: “உண்மையாவே அம்மா அம்மாச்சி தானே சொல்லணும், உண்மைய மட்டும் சொல்லு பாப்பா போதும்”
(‘பாப்பா…நீ தான் என்னுடைய வாழ்க்கை முழுவதுக்குமான விருது’) என அதில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும், கணவன், மனைவி கெமிஸ்ரியை பாராட்டுவதுடன், விருது வாங்கிய சுந்தரிக்கு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.
இதேபோல, விஜய் டிவியிலும் சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடந்தது. இதில் தமிழும், சரஸ்வதியில் சீரியலில் நடிக்கும் நக்ஷ்த்திரா நாகேஷ் மற்றும் தீபக் இருவருக்கும் சிறந்த ஆன் ஸ்கிரின் ஜோடிக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது தீபக் தனது மனைவியுடனும், நக்ஷ்த்திரா தனது கணவனுடனும் வந்து விருதுகளை வாங்கி மேடையை ஜமாய்த்து விட்டனர்.
அப்போது தனது கணவனுடன் எடுத்த புகைப்படங்களை நக்ஷ்த்த்திரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து’ இந்த விருதை எனக்கு வழங்க எனது மிகப்பெரிய விருதை மேடையில் கொண்டு வந்ததற்கு விஜய் டெலிவிஷனுக்கு நன்றி; இந்த புகைப்படங்களை நாங்கள் எடுத்தோம் என்பதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி ராகவ்! என்று எழுதியுள்ளார். இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போஸ்டை லைக் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“