பல போராட்டங்கள் ஆலோசனைக்கு மத்தியில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற உள்ளார். எலான் மஸ்க்-ன் 44 பில்லியன் டாலர் ஆஃபர் குறித்துத் தீவிரமாக ஆலோசனை செய்து பங்குதாரர்களுக்கும் சாதகமாக பிரட் டெய்லர் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஜாக் டோர்சி-ஐ தள்ளிவிட்டாரா பராக் அகர்வால்.. எலான் மஸ்க் டிவீட்டால் சர்ச்சை..!
இதன் மூலம் எலான் மஸ்க் தனது தனியார் முதலீட்டு நிறுவன கூட்டணி உடன் இணைந்து டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றி, டிவிட்டர் நிறுவனத்தைப் பங்குச்சந்தையிலிருந்து வெளியேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் மொத்த நிர்வாகப் பொறுப்பும் எலான் மஸ் கையில் வரும் நிலையில், டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிலை என்ன..?
டிவிட்டர் சிஇஓ பராக் அக்ரவால் மனைவி யார் தெரியுமா..?
டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் எலான் மஸ்க், சில நாடுகளுக்கு முன்பே, தான் டிவிட்டரைக் கைப்பற்றினால் டிவிட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு 0 டாலர் சம்பளம் மட்டுமே அளிக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் நிர்வாகக் குழுவை அகற்றுவதை மறைமுகமாக உறுதி செய்தார்.
பராக் அகர்வால்
டிவிட்டர் நிர்வாகக் குழு டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்-ம் முக்கிய உறுப்பினராக இருக்கும் நிலையில், எலான் மஸ்க் நிர்வாகத்திற்கு வந்த பின்பு எலான் மஸ்க் பராக்-ஐ பணி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.
ஜோசப் ஸ்டாலின்
டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கும் போது சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் The Water Commissar புகைப்படத்தைக் கொண்டு ஜாக் டோர்சி-யை பராக் அகர்வால் தள்ளிவிட்டார் என்பது போன்ற டீவீட் செய்தார். இந்த நிலையில் டிவிட்டரை தற்போது எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றியுள்ளார்.
இளம் இந்திய சிஇஓ
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் இருக்கும் இந்திய சிஇஓ-க்களில் மிகவும் இளமையானவர் பராக் அகர்வால், இவருடைய நியமனத்தை இந்தியா மொத்தமும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படலாம், அல்லது தானாக வெளியேறலாம்.
42 மில்லியன் டாலர்
அப்படி எலான் மஸ்க் டிவிட்டரைக் கைப்பற்றிய 12 மாதத்திற்குள் பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டால் தான் வைத்திருக்கும் பங்குகள், வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 42 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெறுவார் என ஈக்விலார் கணித்துள்ளது.
எலான் – பராக்
அனைத்திற்கும் மேலாக எலான் மஸ்க்-ஐ டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர்க்கக் கூடாது என்றும், டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றக் கூடாது என்றும் சக ஊழியர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை நின்றவர் பராக் அகர்வால். இதனால் கட்டாயம் பராக் அகர்வால்-ன் பதவியில் பெரும் மாற்றம் இருக்கும்.
Twitter CEO Parag Agrawal may get $42 million if Elon Musk sacked him
Twitter CEO Parag Agrawal may get $42 million if Elon Musk sacked him பராக் அகர்வால் வெளியேற்றப்படுவாரா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?