பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் எடுத்துவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளிநேரம் முடிந்தபின்பும் வீட்டிற்கு செல்லாமல் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்தெறிந்துள்ளனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இதுதொடர்பாக 12 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுவதாகவும், உத்தரவை மீறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.