வேலூர் : பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குமரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூரில் வகுப்பறை மேசைகளை உடைத்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.