பொது இடங்களில்
குண்டுவெடிப்பு
நிகழ்வதும், அப்பாவி பொகுமக்கள் பலியாவதும் பாகிஸ்தானில் வழக்கமான நிகழ்வாக உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக இன்று அங்கு துயரச் சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.
பாகிஸ்தானின் பிரபலமான கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. வேனில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சீனர்கள் மூன்று பேர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனில் குண்டு வெடித்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் – விரைவில் பாக். திரும்புகிறார்!
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பல்கலக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதவிகளை கொண்டு, குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.