புதுச்சேரி, :பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில், சாலை பாதுகாப்பு, இயற்கையை காப்போம், கல்வியின் முக்கியத்துவம் குறித்த முப்பெரும் விழா நடந்தது.தலைமையாசிரியை திலகவதி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பரிசு வழங்கினார். தொடர்ந்து, செல்லிப்பட்டு பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம், பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேசிய பசுமை படையின் பொறுப்பாசிரியர் சசி, பொம்மலாட்டம் குறித்து பயிற்சி அளித்தார்.விழா ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செல்வநாயகி, உமாமகேஸ்வரி, பிரேமானந்த் கோன்தரன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன் நன்றி கூறினார்.
புதுச்சேரி, :பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில், சாலை பாதுகாப்பு, இயற்கையை காப்போம், கல்வியின் முக்கியத்துவம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.