புதுச்சேரியில் சுகாதாரத் திருவிழா : 3 நாட்கள் நடக்கிறது| Dinamalar

புதுச்சேரி, :மத்திய சுகாதாரத் துறை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித் துறை சார்பில், சுகாதார திருவிழா புதுச்சேரியில் வரும் 29ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் மதியம் 12:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் சுகாதார திருவிழாவில், சுகாதார சிறப்பு வல்லுநர்கள், தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றனர்.மேலும், தமிழர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ஆரோக்கியமான உணவு கண்காட்சி நடக்கிறது. மருத்துவ மாணவர்கள், மருத்துவ கனவுடன் இருக்கும் மாணவர்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட பாடங்களை படிக்கும் மாண வர்களுக்கும் பயன்படும் விதமாக உடல் ஆரோக்கியம் பற்றிய அறிவுரைகள், உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்ற காட்சியகம் நடக்கிறது.அனைத்து மாணவர்கள், பொது மக்கள் சுகாதார திருவிழாவில் கலந்து கொள்ளு மாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.