புதுடெல்லி: ஒன்றிய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதன் தொடக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, ரூ.300 நுழைவுக் கட்டணம் செலுத்திய பார்வையாளர்கள் பிரகதி மைதானத்தில் ஏசி, நகரும் படிக்கட்டுகள், லிப்ட் உள்ளிட்டவை இயங்கவில்லை. மேலும், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அமைச்சர் கோயல் தனது உரையை பாதியில் முடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.