புதுடெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘சுதந்திரம் தொடர்பான அமிர்தப் பெருவிழாக் கதைகள்’ (ஆசாதி கி அம்ரித் கஹானியான்) என்ற குறு வீடியோ தொடர் ஒன்றை மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பெண் விடுதலையே ஒரு சமூகத்தின் விடுதலை என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ”விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்கான எண்ணங்கள் பெண் விடுதலையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. சமூகத்தில் ஒரே மாதிரியான மற்றும் தடைகளை எதிர்த்துப் போராட வேண்டிய பெண்களுக்கு ஆசாதி அல்லது சுதந்திரம் என்ற சொல் ஒரு பரந்த பொருளைக் கொண்டுள்ளது.
பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக் குறியீட்டின் தனிச்சிறப்பு. இத்தகைய முயற்சிகள் மூலம் இந்தியர்களின் எழுச்சியூட்டும் கதைகளை வெளிக்கொண்டுவரப்படும், இந்தக் கதைகள் அதிக அளவிலான மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்களின் இலக்குகளை அடைய ஊக்குவிக்கும்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் உட்பட 25 காட்சிப் படங்களை நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும். நெட்ஃப்ளிக்ஸ் இயங்குதளம் அமைச்சகத்திற்கென இரண்டு நிமிட குறும்படங்களை தயாரிக்கும், அவை சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு தூர்தர்ஷன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா, நெட்ஃபிக்ஸ் குளோபல் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பேல பஜாரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பத்ம விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், பசந்தி தேவி, ஐந்து நாட்களில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் பெண்மணியான பத்மஸ்ரீ விருது பெற்ற அன்ஷு ஜம்சென்பா மற்றும் நாட்டின் முதல் பெண் தீயணைப்பு வீரரான ஹர்ஷினி கன்ஹேகர் ஆகியோரும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.