தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘துணைவேந்தர் நியமனம் உரிமை யாருக்கு? மாநில அரசுக்கா? ஆளுநருக்கா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Advice Avvaiyar
உரிமை யாருக்கு என்பதை விட,அதை எப்படி கையாளுகின்றனர் என்பது முக்கியம். சட்டென மாற்றி விட முடியாது. மாநில அரசின் உரிமை தான் எனும் நிலை வர,முதல் அடியை எடுத்து வைப்பது சரியே.யார் வந்தாலும், இருந்தாலும் ஜாதி,மத,பேதமின்றி லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான தலைமை இருக்க வேண்டியது அவசியம். அங்கு பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் நடவடிக்கைகள் இருக்கனும்.நற்பெயரெடுத்து,தக்க வைத்துக் கொண்டால் எதிர்ப்புகள்,மோதல்கள் வர சான்ஸே இல்லை. எதிரெதிர் துருவங்களாக இல்லாமல் இருந்தால் தான் சுமுக உறவு நிலவும். நிலவ வேண்டும். அது இருவருக்கும் தேவைப்படும் ஒன்றாக இருக்கும்
raja
மாநிலம் கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது. இதில் தலையிட ஆளுநருக்கு என்ன உரிமை உள்ளது. மாநில அரசை எதிர்த்து மாநாடு நடத்த என்ன உரிமை உள்ளது? மாநில அரசுக்கு எதிரான ஆளுநரை அகற்ற வேண்டும்
சரவணன்
ஆளுநருக்கு தான் உண்டு. Infact இந்த bill ஐ கூட ஆளுநருக்கு தான் அனுப்பி வைக்கனும்
Manoharan Sarangapani
நியாப்படி பார்த்தால் முதல்வருக்கே மக்கள் பிரதிநிதியிடம்தான் இருக்க வேண்டும்
Habeeb Rahman
ஆளுநருக்கே அதிகாரம் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு. தமிழக ஆளுநர் போன்று ஜனாதிபதியும் தமிழக அரசு போன்று மத்திய அரசும் நடந்து கொண்டால். இதை மத்தியில் ஆளும் அரசு ஒத்துக்கொள்ளுமா. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆளுநர் பாலமாக விளங்க வேண்டுமே தவிர தனியாக ஒரு ஆட்சியை நடத்த கூடாது. இது ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டு மக்களை அவமதிக்கும் செயல்.
பாலமுருகன் காஞ்சிக்குடிக்காடு
மாநில அரசுக்குனா அவங்க கட்சிகாரங்களை போடுவாங்க, ஆளுநருக்குனா பாஜக கட்சிகாரங்களை போடுவாங்க… எங்கங்க ஆளுநர் நடுநிலையா இருக்காங்க…எதுக்கு இரண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு பேசாம அதுக்கு ஒரு தேர்தலை வைச்சு வி்ட்டு்டலாமே…மக்களாவது மகிழ்ச்சியா இருப்பாங்க..
play6892boy
துணைவேந்தர் நியமணம் மாநில ஆளூநர் அவர்கள் நியமிக்க வேண்டும் அப்போது தான் அரசியல் சாயம் பூசபடாமல் நல்ல முறையில் இருக்கும் அதை விட்டு மாநில ஆளூம் அரசிடம் அதிகாரம் இருந்தால் அதன் பின் நல்ல படித்த திறமயைானவர்கள் வருவதற்க்கு பதிலாக ஆளூம் கட்சி கரைவேட்டி காரன் தான் துணைவேந்தர் பதவிக்கு வருவானுங்க எனவே இன்று தமிழக அரசு தீர்மானத்தை தமிழக ஆளூநர் நிராகரிக்க வேண்டும் என்றுமே மாநில அரசுக்கு அதிகாரத்தை வழங்க கூடாது
a_praveen_kumar_27
துணைவேந்தர் நியமனம் உரிமை மாநில அரசுக்கு தான் வழங்க வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு அரசு நியமனம் செய்யும் துணைவேந்தர்களால் மட்டுமே பாடத்திட்டம் கல்வி கலாச்சார உட்பட அனைத்தும் அறிந்திருப்பார்கள், இதுவே ஆளுநர் நியமிப்பார் என்றார் வேற்று மாநிலத்தவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படுவார்கள் அப்படி நியமிக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் உயர் கல்விக்கும் எவ்வித பிரயோஜனமும் இல்லைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM