”சுதந்திரம் பெற்றது முதல் பல்கலைகழகத் துணை வேந்தர்களை ஆளுநர் தான் நியமனம் செய்து வருகிறார்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், “சுந்ததிரம் பெற்றது முதல் பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர்தான் நியமனம் செய்து வருகிறார். இது தவறு என்று நினைத்திருந்தால் திமுக கூட்டணியில் இருந்தபோதே மாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது மாற்றியுள்ளனர். குடியரசு தலைவர் இதற்கு ஒப்புதல் அளிக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று முதல்வர் – ஆளுநர் மோதல் குறித்து பேசினார்.
மேலும், அவரிடம் காஞ்சி மடாபதி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சால்வையை அவமரியாதையாக வழங்கியதாக விமர்சனங்கள் எழுந்தது குறித்து கேட்டபோது, “காஞ்சி மடம் மிகவும் பழமையானது. அதன் மடாதிபதி ஒரு சில ஆச்சாரங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர்களின் விதியில் இருக்கும். அதன்படிதான், அவர் நடந்து கொண்டிருப்பார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM