இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், மேக் இன் இந்தியா திட்டங்கள் தோல்வி அடைந்தாலும் தற்போது சர்வதேச நாடுகளில் டிமாண்ட் அதிகரித்துள்ளதால் புதிதாக உருவாகி வரும் வாய்ப்புகளைப் பிற நாடுகளுக்குச் செல்லும் முன்பு இந்தியா கைப்பற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது 3 நிறுவனங்களிடம் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
சீனாவை ஓரம்கட்ட இந்தியா-வின் சூப்பர் திட்டம்..!
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது உலகின் முன்னணி செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனங்களான இண்டல் கார்ப், குளோபல் பவுண்டரீஸ் இன்க், தைவான் செமிகண்டக்டர் ஆகிய 3 நிறுவனங்களிடம் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கவும், உற்பத்தி தளத்தை அமைக்கும் படியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹை டெக் உற்பத்தி
இந்த நிறுவனங்களின் வருகை மூலம் இந்தியாவில் ஹை டெக் உற்பத்தித் திறன் அதிகரித்து, ஏற்றுமதி செய்யப்படும் அதி நவீன பொருட்களின் அளவு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அனைத்திற்கும் மேலாகச் சீனாவுக்கு இணையாக எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியில் இந்தியாவும் முன்னேற முடியும்.
PLI திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த வருடம் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்காகச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான உற்பத்தி ஊக்கத் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் அல்லாமல் இத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி துவங்கினால் மொத்த திட்ட செலவுகளில் 50 சதவீதத்தை அரசு ஏற்கும் மிகப்பெரிய ஆஃபரையும் மத்திய அரசு வழங்கியது.
தைவான் செமிகண்டக்டர்
தைவான் செமிகண்டக்டர் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிப் உற்பத்திக்காக 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாகத் தொகையை முதலீடு செய்துவரும் நிலையில், இந்தியாவில் இதில் பல வாய்ப்புகள் உள்ளது.
இந்தியா
குறிப்பாகச் சரக்கு போக்குவரத்து, தண்ணீர் வசதிகள், மின்சார விநியோகம் ஆகியவை இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் செமிகண்டக்டர் துறை இந்த 3 நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாந்தா குரூப், டாடா
இந்தியாவில் ஏற்கனவே அனில் அகர்வாலின் வேதாந்தா குரூப் மற்றும் பாக்ஸ்கான் குரூப் இணைந்து செமிகண்டக்டர் சிப் தயாரிப்புத் தளத்தை அமைக்க உள்ளது. இதேபோல் டாடா குழுமம் OSAT பிரிவில் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian govt calls Intel, TSMC, GlobalFoundries to setup semiconductor chip manufacturing plants
Indian govt calls Intel, TSMC, GlobalFoundries to setup semiconductor chip manufacturing plants மத்திய அரசு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் 3 நிறுவனங்கள்.. எதற்குத் தெரியுமா..?!