மலையகத்தின் முதலாவது பேராசிரியை என்ற கௌரவம் திருமதி அன்னலட்சுமி சேனாதிராஜாவிற்கு கிடைத்துள்ளது.
அவருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் முகாமைத்துவ பேராசிரியர் என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது. மலையகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக, கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதல் பீடாதிபதியாக கடமையாற்றிய பெருமை ராஜலட்சுமி சேனாதிராஜா அம்மையாருக்கு உள்ளது. இவர் பல தடவைகள் பதில் உபவேந்தராகவும் கடமையாற்றியவர்.
பேராசிரியை ராஜலட்சுமி பல நூல்களை எழுதியவர். தேசிய கல்வி நிறுவகத்திலும் பணியாற்றி வருகிறவர். ‘மழைக் குழம்புகளின் வர்ணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு, மலையக இலக்கியத்திற்கும் பங்களிப்பு செய்திருக்கிறார். கொழும்பு தமிழ் சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினராகவும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆலோசகர்களில் ஒருவராகவும் அவர் கடமையாற்றி வருகிறார்.
இந்த நியமனம் பற்றி கருத்து வெளியிட்ட அவர் எந்த பின்புலத்தில் இருந்து வந்தாலும், எத்தனை சவால்கள் இருந்தாலும், திடசங்கற்பத்துடன் முயன்றால், இலக்குகளை அடைய முடியும் என தெரிவித்தார்.