ராஞ்சி: தொடர் மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி எழுப்பி டிவிட் போட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. இந்த நிலையில், அங்கு ஆட்சி செய்து வரும், ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு, பொருளதார நெருக்கடி காரணமாக,பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் வறுமையாலும் வேலைவாய்ப்பின்மையாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அங்கு மின்வெட்டு அதிகரித்து உள்ளது. இது அம்மாநில மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் அம்மாநில முதல்வருக்கு மின்வெட்டு தொடர்பாக கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஜார்கண்டின் வரி செலுத்துபவராக நாங்கள் உள்ளோம், இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை உள்ளது, அது ஏன் என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சாக்ஷியின் டிவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.