கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அந்த மாநில மக்களை கடு அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனையடுத்து, மாநிலத்தில் மீண்டும் தலைத்தூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில
முதல்வர் பசவராஜ் பொம்மை
செய்தியாளர்களிடம் இன்று விளக்கினார். அப்போது அவர் கூறியது:
கர்நாடகாவில் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.தொற்று தீவிரமடையாமல் தடுப்பதற்கு மாநில எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் கொஞ்சம் அதிகரித்து வருகின்றன. ஆனால் நிலைமை பயப்படும்படி இல்லை
பிரதமர் மோடியுடன் நாளை ( ஏப்.27) நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய அரசு வழங்கும் அறிவுறுத்தலின்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.