தமிழ் சினிமாவில் என்னதான் நடிகர்களுக்குள் நட்பு இருந்தாலும் அவர்கள் ரசிகர்களால் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகின்றனர். எம்.ஜி.ஆர்மற்றும் சிவாஜி, ரஜினி மற்றும் கமல் வரிசையில்
விஜய்
–
அஜித்
இருவரும் ரசிகர்களால் போட்டி நடிகர்களாக பல ஆண்டுகளாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்தின்
வலிமை
திரைப்படமும் விஜய்யின்
பீஸ்ட்
திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் வெளியாவதால் வலிமை படத்திற்கு ரசிகர்களை எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
அதிரடியாக முடிவெடுக்கும் அஜித்..!ஒர்க் அவுட் ஆகுமா ?
அதைப்போலவே விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இருப்பினும் இரு படங்களும் வசூலை பொறுத்தவரை வெற்றிப்படங்களாகவே அமைந்தது.இதைத்தொடர்ந்து அஜித் தன் அடுத்த படமான ak61 பட வேலைகளிலும், விஜய் தளபதி 66 பட வேலைகளிலும் பிஸியாக இருக்கின்றனர்.
அஜித்
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் விஜய் மீண்டும் ஒரே நேரத்தில் மோதவுள்ளனர். ஆனால் இம்முறை வெள்ளித்திரையில் இல்லாமல் சின்னத்திரையில் மோதவுள்ளனர். மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விஜய்யின்
மாஸ்டர்
திரைப்படமும் அஜித்தின் வலிமை திரைப்படமும் ஒளிபரப்பாகவுள்ளது .
விஜய்
சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் படமும் ஜீ தொலைக்காட்சியில் வலிமை திரைப்படமும் ஒளிபரப்பாகவுள்ளது. எனவே இவ்விரு படங்களில் எந்த படம் TRP யில் முன்னிலை பெறவுள்ளது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை உதயநிதி பேச்சு; பாராட்டிய லிங்குசாமி!