திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே 95 ஏக்கர் பரப்பளவில் பிடாரி ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரியை கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் ஏலம் எடுப்பது வழக்கம். இந்த வருடம் 55 ஆயிரம் ரூபாய்க்கு பிரபு என்பவர் ஏரியை ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை அதில் விட்டு வளர்த்து வந்தார்.
மீன்கள் நன்றாக வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில், கரை பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளின் நீர் தேவைக்காக ஏரியில் இருக்கும் நீரை இரைத்து இரண்டு மாதத்திற்கு பின் மீனைப் பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.
இத்தகைய நிலையில், இன்று காலை பிரபு ஏரிக்கு வந்து பார்த்த பொழுது மீன்கள் செத்து கிடந்தது. அடி ஆழத்தில் இருக்கும் மீன்களும் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியது. இதனால், ஐந்து லட்சம் ரூபாய் நாட்டு மீன்கள் உயிரிழந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மக்கள் அனைவரும் இந்த இடத்தில் குவிந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த ஏரி நீரை பொதுமக்கள் கால்நடைகளுக்கு நீரை இறைச்சி பாய்ச்ச வேண்டாம் என்று தண்டோரா அடித்து அறிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஏலம் எடுப்பதில் இருந்த தகராறு காரணமாக மர்மநபர்கள் ஏரியில் விஷத்தை கலந்து தெரியவந்துள்ளது.
இது யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.