கீவ், : உக்ரைன் மீதான போர் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், ‘உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், மூன்றாம் உலகப் போரை தூண்டி விடுகின்றன’ என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆவேசமாக கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போரைத் தொடர்ந்தது. சில நாட்களில் வீழ்ந்துவிடும் என்று நினைக்கப்பட்ட நிலையில், ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடும் சவால் விடுத்து வருகிறது.இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளதாவது:உக்ரைன் போர் தொடர வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.
அதனால்தான் உக்ரைனுக்கு அவை உதவி வருகின்றன.இதன் வாயிலாக, மூன்றாவது உலகப் போரை உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் திணிக்கின்றன. எரியும் நெருப்பில் அவை எண்ணெய் ஊற்றி வருகின்றன. அணு ஆயுத மோதலை உருவாக்க இந்த நாடுகள் தூண்டுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கீவ், : உக்ரைன் மீதான போர் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், ‘உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், மூன்றாம் உலகப் போரை தூண்டி விடுகின்றன’ என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆவேசமாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.