மூன்றாம் உலக போருக்கான உண்மையான ஆபத்து! ரஷ்யா பகீர் எச்சரிக்கையால் பரபரப்பு


உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்பில் அதிரடியான எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது.

அதன்படி மூன்றாம் உலக போருக்கான உண்மையான ஆபத்து இந்த போர் என்று தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்ய படையினர் 423 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

உக்ரைனின் 26 ராணுவ இலக்குகளை அழித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் உடனே பேச்சுவார்தைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்ய மண்ணில் உக்ரைன் படை கால் வைத்தது உண்மை தான்! குண்டு வீசி தாக்குதல்.. பெண் உள்ளிட்டோருக்கு நேர்ந்த நிலை

மேலும் அவர் கூறுகையில், உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவிகள் நீடித்தால் 3ம் உலக போரின் உண்மையான ஆபத்து தற்போதும் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

நல்ல எண்ணத்திற்கும் வரம்புகள் உள்ளதாக கூறிய லாவ்ரோவ், அது பரஸ்பரமாக இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் பலன் ஏதும் இருக்காது என்றும் அமைதி வழியில் செல்லவே ரஷ்யா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.