மூன்று நாள்கள் தாங்கும் பேட்டரி – புதிய நோக்கியா போன் அறிமுகம்!

நோக்கியா நிறுவனம் முன்னதாக நடந்துமுடிந்த MWC நிகழ்வில், இனி பிரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தது. அந்த வகையில் நிறுவனம், பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று நிறுவனம் புதிய
நோக்கியா ஜி21
பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. மூன்று நாள்கள் தாங்கும் பேட்டரி,
ஆண்ட்ராய்டு
12 அப்டேட், 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆகியன இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஜி21 அம்சங்கள் (Nokia G21 Specifications)

இந்த ஸ்மார்ட்போனில் 6.5″ இன்ச் HD+ டிஸ்ப்ளே 720×1600 பிக்சல் ரெசலியூஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 பதிப்பு பயனர்களுக்குக் கிடைக்கும் எனத் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஸ்மார்ட்போனை இயக்க ஆக்டாகோர் Unisoc T606 சிப்செட் நிறுவப்பட்டுள்ளது.

எச்சரிக்கை! QR குறியீடு மோசடி – நீங்கள் இப்படி செய்தால் உங்கள் பணத்தை பாதுகாக்கலாம்!

நோக்கியா ஜி21 கேமரா (Nokia G21 Camera)

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கேமராக்களை பொருத்தவரை, பின்பக்கம் டிரிப்பிள் கேமரா அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு 50MP மெகாபிக்சல் f/1.8 சென்சாரும், 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சாரும், 2MP மெகாபிக்சல் மேக்ரோ சென்சாரும் அடங்கியுள்ளது.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. OZO ஆடியோ அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5,050mAh பேட்டரி உள்ளது.

இதனை ஊக்குவிக்க 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் இந்த பேட்டரி சாதாரணப் பயன்பாட்டுக்கு மூன்று நாள்கள் வரை நீடித்து இருக்கும் என நிறுவனம் விளம்பரப்படுத்தி இருக்கிறது.

கண்ண மூடிட்டு வாங்கலாம் – மிரட்டும் அம்சங்களுடன் வெளியான மோட்டோ ஜி52!

நோக்கியா ஜி21 விலை மற்றும் சலுகைகள் (Nokia G21 Price in India)

புதிய நோக்கியா பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகி விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டது. அமேசான் ஷாப்பிங் மற்றும் நோக்கியாவின் பிரத்யேக இணையதளம் வாயிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். சுலப மாதத் தவணைத் திட்டமும் இந்த போனிற்கு கிடைக்கிறது.

மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதில் 4GB+64GB வேரியண்டின் விலை ரூ.12,999 ஆகவும், 6GB+128GB வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. Nordic Blue and Dusk ஆகிய இரு நிறங்களில் இது கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுடன், நோக்கியாவின் பிரத்யேக நோக்கியா பவர் இயர்பட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ப்ளூடூத் இயர்பட்ஸின் அசல் விலை ரூ.3,599 ஆகும். சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் விலையில் நோக்கியா சற்று சமரசம் செய்திருக்க வேண்டும். காரணம், அதிரடி அம்சங்களுடன் இதே விலையில் நிறைய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் உள்ளன. இது நோக்கியாவை தலைதூக்க விடாமல் செய்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.