புதுடெல்லி: சமீபத்தில் 78 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று முடக்கியது.
இந்தியாவை சேர்ந்த 10 சேனல்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு இந்தத் தடையை மத்திய அரசு விதித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள், இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொதுஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருவதாகவும் தெரிய வந்ததையடுத்து அவை முடக்கப்பட்டுள்ளன.