`ரஜினி 169'-க்கு `ஆல் தி பெஸ்ட்' சொன்ன விஜய், நெகிழ்ந்த நெல்சன்… கதாநாயகிகள் யார், யார் தெரியுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிக்கும், இயக்குநர் நெல்சன் இணையும் `ரஜினி-169′ படம், வருகிற ஜூலையில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துவருகின்றனர்.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, பீஸ்ட்’ படங்களை அடுத்து நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்தை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. இதனிடையே நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ குறித்துப் பலவகையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும்கூட, படத்தின் வசூல் விஜய்யை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. நெகட்டிவ் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘பீஸ்ட்’ படக்குழுவினர்கள் சிலரை அழைத்துத் தன் வீட்டில் விருந்து கொடுத்திருக்கிறார் விஜய். நெல்சன், மனோஜ் பரமஹம்சா, பூஜா ஹெக்டே, அனிருத் உட்பட பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

ரஜினி 169

‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கின் போதுதான் நெல்சன், ரஜினியிடம் கதை சொல்லி ஓகே வாங்கினார். எனவே, ரஜினி படத்திற்கான கதை விஜய்க்கு நன்கு தெரியும் என்பதால், நேற்று நடந்த கெட் டுகெதரில் நெல்சனுக்கு ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லி நெல்சனை நெகிழ வைத்திருக்கிறார் விஜய்.

இதனிடையே ‘ரஜினி 169’க்கான ஸ்கிரிப்ட்டை மெருகேற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் நெல்சன். ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்க பேசிவருகின்றனர். அவர் தவிர பிரியங்கா மோகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. தொழில்நுட்பக் கலைஞர்களைப் பொறுத்தவரை ‘பீஸ்ட்’டில் நெல்சனுடன் கைகோத்தவர்களே, ரஜினி படத்திலும் பணியாற்றவுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.