தங்கள் மண்ணில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது.
அதன்படி ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் உக்ரைன் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாகவும், பல வீடுகளை சேதப்படுத்தியதாகவும் ரஷ்ய பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் Belgorod பிராந்தியத்தின் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தான் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா தோல்வி! உக்ரைன் வெற்றி பெற்றுள்ளது… அமெரிக்கா பரபரப்பு தகவல்
அவரின் சமூகவலைதள பதிவில், ஒரு கிராமம் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்கு இலக்கானது.
இதில் காயமடைந்த பொதுமக்கள் இருப்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இச்சம்பவத்தில் ஆண் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டதுடன், ஒரு பெண்ணின் கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே வந்துவிட்டன. தாக்குதலில் பகுதியளவு பல வீடுகள் பகுதியளவு சேதத்தை சந்தித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஷ்யாவில் இரண்டு இடங்களில் தீப்பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அது உக்ரைன் நடத்திய தாக்குதலா என கேள்வி எழுந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.