விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வருவாய்த்துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.
தென்காசி செல்லும் சாலையில் சொக்கன் கோவில் அருகே, கொண்டநேரி கண்மாயை ஒட்டியுள்ள மூன்றரை ஏக்கர் பரப்பிலான நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
அவற்றை அகற்றக் கோரி அரசு சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை இடித்து அகற்றினர்.