ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள்- சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும், நடப்பு 2022-23ம் ஆண்டில் 50000 எண்ணிக்கை புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்.
சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 2022-23ம் ஆண்டிலேயே இலவச மின் இணைப்பு வழங்கப்படும். 
தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். 
ரூ.166 கோடி மதிப்பீட்டில் மிக உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும். மின்தடங்கல் எதுவும் இல்லாமல் உயர் மின் அழுத்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வரும் நிதியாண்டில் புதிய ஹாட் லைன் கோட்டம் உருவாக்கப்படும். 
இவ்வாறு அமைச்சர் பேசினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.