அதானி வில்மர் பங்கு விலையானது இரண்டு மாதத்தில் கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சமையல் எண்ணெய் பங்கு விலையானது நடப்பு ஆண்டில் பிப்ரவரி 8 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.
பங்கு சந்தையில் 221 ரூபாய் என்ற விலையில் பட்டியலிடப்பட்ட இப்பங்கின் விலையானது, கடந்த அமர்வில் 764.60 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து தற்போது வரையில் 245.97 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. ஐபிஓ-வில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 3 லட்சத்திற்கு மேல்.
வரான் பபெட்-ஐ முந்திய கௌதம் அதானி.. உலகின் 5வது பெரிய பணக்காரரானார் அதானி..!
எண்ணெய் தடை
சில தினங்களுக்கு முன்பு இந்தோனேசியா பாமாயில் இறக்குமதியினை, ஏப்ரல் 28 முதல் தடை செய்யவுள்ளதாக அறிவித்தது. இது சமையல் எண்ணெய் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனை காரணமாக சன் பிளவர் ஆயில் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் இப்பங்கின் விலையானது அதிகரித்து வருகின்றது.
இந்தியாவில் பாதிப்பு
உள்நாட்டு சந்தையில் விலை அதிகரித்துள்ள நிலையில், விலையினை கட்டுப்படுத்த இந்தோனேசியா எண்ணெய் ஏற்றுமதியினை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா அதன் மொத்த இறக்குமதியில் 45 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. இந்த நிலையில் இந்தோனேசியாவின் இந்த முடிவானது இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதே சமயம் எண்ணெய் உற்பத்தியாளர்களின் மார்ஜின் விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி வில்மர்
இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான அதானி வில்மர் பங்கின் விலையானது தொடர்ந்து நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் டிப்ஸ்2டிரேடர் ஆய்வறிக்கையானது, சமையல் எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடையானது, பணவீக்கம் மற்றும் எண்ணெய் விலையினை அதிகரிக்க தூண்டலாம். ஏற்கனவே இப்பங்கின் விலையானது அதன் ஆல் டைம் உச்சத்தில் காணப்படுகின்றது.
எங்கு வாங்கலாம்?
எனினும் டெக்னிக்கலாக பார்க்கும்போது இப்பங்கின் விலையானது ஓவர்பாட் லெவலில் உள்ளது. ஆக இப்பங்கினில் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இப்பங்கின் விலையானது 520 – 545 ரூபாய் என்ற லெவலில் வரும்போது வாங்கி வைக்கலாம். உள்நாட்டில் எண்ணெய் விலையானது அதிகரிக்கும்போது, அது எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமானதாக மாறலாம். இது அதானி குழும நிறுவனத்திற்கும் ஆதரவாக அமையலாம்.
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
அதானி வில்மர் பங்கு விலையானது சில அரசியல் பதற்றம் காரணமாக ஏற்கனவே உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் ரஷ்யா பிரச்சனையும் பல கமாடிட்டிகளின் விலையை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய் விலையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் சர்வதேச அளவில் சோயாபீன் விதை மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாகும்.
விலை குறைந்தால் வாங்கலாம்
ஆக அந்த நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையானது சப்ளையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதானி வில்மரிடம் இருப்பு இருக்கும்பட்சத்தில் அதன் காரணமாக பயன் பெறலாம். இது அதன் பங்கு விலையிலும் எதிரொலிக்கலாம். இது அதானி வில்மரின் மார்ஜினை அதிகப்படுத்தலாம். ஆக இதன் இபிஎஸ் விகிதமானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். ஆக விலை சரியும் பட்சத்தில் அது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது என பொனான்ஷா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
முடிவுக்கு வரலாம்
இப்பங்கின் விலையானது கடந்த அமர்வில் அப்பர் சர்கியூட் ஆன நிலையில், அதன் சந்தை மதிப்பு 99,373 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் அதன் ஐபிஓ-வில் 218- 230 ரூபாய் என்ற விலையில் பட்டியலிடப்பட்டது.
இதற்கிடையில் எடில் வைஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தின் ஏற்றம் முடிவுக்கு வரலாம். இதன் பங்கு விலையானது அடுத்த 12 மாதங்களில் 559 ரூபாய் என்ற இலக்கு விலையுடன் தொடரலாமென தெரிவித்துள்ளது.
ஜேபி மார்கன் கணிப்பு
இதே சர்வதேச ஆய்வு நிறுவனமான ஜேபி மார்கன், இப்போது பங்கு விலையானது சரியான விலையில் உள்ளது. இது நடு நிலை மதிப்பீட்டினைக் கொண்டுள்ளது. 2023ன் இலக்கு விலை 367 ரூபாய் என்றும் மதிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் பல ஆய்வு கணிப்புகளும் நீண்டகால நோக்கில் எச்சரிக்கையாக இருக்க பரிந்துரை செய்துள்ளன.
லாபம் எவ்வளவு?
இந்த நிறுவனத்தின் நிகரலாபம் டிசம்பர் காலாண்டில் 66% அதிகரித்து, 211 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 127 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 40.5 சதவீதம் அதிகரித்து, 14,379 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 10,229 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனம் என்ன செய்கிறது?
ஜாய்ண்ட் நிறுவனமான இது, சிங்கப்பூர் குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இது சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, சர்க்கரை, தானியங்கள் உள்ளிட்ட பலவற்றையும் உற்பத்தி செய்து வருகின்றது. இதன் ஃபார்ச்சூன் எண்ணெய் பிரான்ட் என்பது மிக பிரபலமான எண்ணெய் பிராண்டுகளில் ஒண்றாகும்.
இன்றைய பங்கு விலை நிலவரம்
அதானி விலமர் பங்கின் விலையானது இன்றும் என்.எஸ்.இ-யில் 4.99% அதிகரித்து, 803.15 ரூபாயாக உள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 803.15 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 787 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 803.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 227 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 5% அதிகரித்து, 802.80 ரூபாயாக உள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 802.80 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 802.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகும்.
Adani wilmar stocks surged 246% in just 2 months: do you have it?
Adani wilmar stocks surged 246% in just 2 months: do you have it?/லட்சாதிபதியாக அதானி கொடுத்த வாய்ப்பு.. ஆனால் எச்சரிக்கையா இருங்க.. ட்விஸ்ட் வைக்கும் நிபுணர்கள்!