26.4.2022
21:00: உக்ரைனில் சண்டை நிறுத்தப்படாததால் மக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான வழித்தடங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகிறார்.
20:00: ரஷிய தாக்குதல்களைத் தடுக்க உதவுவதற்காக உக்ரைனுக்கு தனது முதல் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது. கே.எம்.டபுள்யு. நிறுவனத்திடம் இருந்து கெபார்டு விமான எதிர்ப்பு பீரங்கிகளை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார். முதற்கட்டமாக 50 பீரங்கிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
19:00: உக்ரைன் அதிபருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளுமாறு ரஷிய அதிபர் புதினிடம் துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
18:30: உக்ரைன் மீதான போருக்குப் பிறகு ரஷியா பலவீனமான நாடாக உள்ளது என்று பென்டகன் செய்திச் செயலாளர் ஜான் கிர்பி கூறி உள்ளார்.
18:00: தெற்கு உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மேல், ரஷிய ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறந்ததாக அணுசக்தி நிறுவனம் கூறி உள்ளது. ரஷியாவின் படையெடுப்பு அணு பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது.
12.15: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் இரண்டு மாதத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்துகிறது. இந்த நிலையில் 3-ம் உலக போர் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி பால்ரோவ் கூறுகையில், நல்ல எண்ணத்துக்கு (பேச்சுவார்த்தை) வரம்புக்குள் உள்ளன. ஆனால் அது பரஸ்பரமாக இல்லையென்றால் பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உதவாது. அணு ஆயுத போரின் செயற்கையான அபாயங்களை குறைக்க ரஷியா விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
06.30: ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்துள்ளது.
03.50: உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும். அதே நேரத்தில் மூன்றாம் உலகப் போரின் “உண்மையான” ஆபத்து உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்தார்.
ரஷிய செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், நல்ல எண்ணத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன. ஆனால் அது பரஸ்பரமாக இல்லாவிட்டால் அது பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உதவாது என தெரிவித்தார்.
00.40: உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷிய ராணுவம் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் துறைமுகத்தை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐ.நா. பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரெசுக்கு உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.