விக்ரம் அப்டேட்: டிரெய்லர் Locked and Loading… தமிழ் சினிமாவில் ஒரு மெட்டாவெர்ஸ் முயற்சி!

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்கள் நடிக்கும் பான் இந்தியா படமான ‘விக்ரம்’ வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்திற்கான போஸ்டரை ரயிலில் பிரிண்ட் செய்து ப்ரோமோஷன் செய்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து தற்போது படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தங்களின் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

அதில், இப்படத்தின் டிரெய்லர் மே 18-ம் தேதி கான் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஸ்டாவர்ஸ் மற்றும் லோட்டஸ் மெட்டா என்டர்டெயின்மென்ட் இணைந்து விக்ரம் படத்தின் NFT-க்கள் மற்றும் டிரெய்லரை வெளியிடத் திட்டமிட்டுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதிலும் அதை பயன்படுத்திக் கொள்வதிலும், தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவதிலும் ஆர்வம் உள்ளவர். அந்த வகையில் விக்ரம் படத்தின் போஸ்டர்களை NFT-க்களாக வெளியிடும் அவரது இந்தப் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் இனி வரும் படங்களுக்கு முன்னோடியாக அமையும் எனலாம்.

‘விக்ரம்’ கமல்

இதற்காக ஃபேன்டிகோ (Fantico) என்னும் நிறுவனம் தங்களுடைய தனிப்பட்ட மெட்டாவெர்ஸ் எனப்படும் விர்ச்சுவல் உலகமான ‘விஸ்டாவெர்ஸ்’-ல் ‘விக்ரம்’ பட போஸ்டர்கள், கதாபாத்திரங்களின் மாதிரி வடிவங்கள், டிஜிட்டல் அவதார்ஸ், படத்தில் இடம்பெற்ற பொருள்கள், ஓவியங்கள் போன்றவற்றை வெளியிடுவதுடன், ரசிகர்களுடனான கேள்வி – பதில் நிகழ்வுகள், பிரத்யேக ஸ்க்ரீனிங்ஸ் எனப் பல விஷயங்களை அரங்கேற்ற உள்ளன.

இது பற்றிப் பேசிய கமல், “இது ‘விக்ரம்’ படத்துடன் ரசிகர்கள் மற்றும் அவர்களின் திறமைகளை இணைக்கும் பாலமாக இருக்கும். எதிர்கால படைப்பாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.