தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நடிகர்
விஜய்
. இவரின் படங்கள் செய்யும் வசூல் சாதனையைப்பற்றி அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கொரோனா சூழலிலும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியான இவரது
மாஸ்டர்
படம் வசூல் மழை பொழிந்தது.
திரையரங்குகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா என ஏங்கிக்கொண்டிருந்தவர்ளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார் விஜய். இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின்
பீஸ்ட்
திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.
நான் செருப்பை வைத்து இயக்கினேன் அவர் ஷுக்களை வைத்து இயக்கியுள்ளார்: பார்த்திபன்
படம் வெளியான இரண்டே நாட்களில் இப்படம் 100 கோடி வசூல் செய்ததது. இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என அழைக்கப்படும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
இந்நிலையில் சமீபகாலமாக விஜய்யின் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகிவருகின்றது. அந்த வரிசையில்
அட்லீ
இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான
தெறி
படத்தை பவன் கல்யாண் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியான தெறி மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை செய்தது.
அப்படத்தை தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்கள விட நல்ல படங்கள் ஓடுது Beast -ஐ கலாய்தாரா உதயநிதி?