புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 31ம் தேதி வரையில் இது மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 2020ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவிற்கு 32.79 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4,751 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் 71.23 சதவீதம் பேர் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வந்து சென்றுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 61,190 பேர் இந்தியா வந்து சென்றுள்ளனர்.