6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி!

டெல்லி:  கொரோனா நான்காவது அலை பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது. அதுபோல,  5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Corbevax க்கு அவசரகால பயன்பாட்டுக்கும் டிசிஜிஐ அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, இது வரை 187 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் போட்டப்பட்டுள்ளது. 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது. தற்போது, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட Biological E நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் (Corbevax) போடப்படுகிறது , 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் செலுத்தப்படுகிறது. தொடர்ந்து இந்த ஆண்டு  மார்ச் 16ஆம் தேதி 12-14 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தற்போது,  6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.  கடந்த வாரம், DCGI அமைப்பின் பொருள் நிபுணர் குழு (SEC) ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்திடம் அதன் கோவிட்-19 தடுப்பூசியை 2-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவது தொடர்பான கூடுதல் தரவுகளைக் கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

2.70 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை 4.68 லட்சம் முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசோதனை செய்தவர்களின் தொற்று உறுதியாகும் விகிதமான தினசரி நேர்மறை விகிதம் தற்போது 0.55 சதவீதமாக உள்ளது என்றும் வாராந்திர நேர்மறை விகிதம் 0.58 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.