7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று விமான நிலைய ஆணைய குழு தெரிவித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 1,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முனையம் கட்டி வருகின்றனர். இதனை பார்வையிட்டார் இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் மண்டல இயக்குனர் சஞ்சீவ் ஜிண்டால்.
அப்போது அவர், இன்னும் மூன்று ஆண்டுகளில் 7000 கோடியில் தமிழக விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். இந்தியாவிலேயே தமிழகத்திற்கு மட்டும் தான் விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருச்சி உட்பட விஜயவாடா திருப்பதி ஆகிய விமானங்களில் விமான நிலையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.
மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கப்பட்டு, சேலத்தில் 7.5 கோடி ரூபாய் செலவில் ஏப்ரான் கட்டமைப்பு வசதி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.