Dhanush:தனுஷும், அண்ணனும் எப்படிப்பட்டவர்கள்: உண்மையை சொன்ன நடிகை

செல்வராகவன் இயக்கத்தில்
தனுஷ்
பல ஆண்டுகள் கழித்து நடித்திருக்கும் படம்
நானே வருவேன்
. தம்பி தனுஷை இயக்கியிருப்பதுடன், தானே வில்லனாகவும் நடித்திருக்கிறார் செல்வராகவன்.

அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை
எல்லி அவ்ரம்
நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது செல்வராகவன் குடும்பத்திற்கு நெருக்கமாகிவிட்டார் எல்லி.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்றார். அதை பார்த்த ரசிகர்களோ தனுஷ் பற்றி சொல்லுங்கள் என்றார்கள்.

அதற்கு எல்லி கூறியதாவது,

இதுவரை என்னுடன் சேர்ந்து நடித்த அன்பான நடிகர்களில் தனுஷும் ஒருவர். மிகவும் ப்ரொஃபஷனல். வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆதரவானவர். தன்னடக்கம் கொண்டவர். ஒரு ஜென்டில்மேன் என்றார்.

செல்வராகவன் சார் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, எல்லி கூறியதாவது,

அருமையான இயக்குநர். செல்ராகவன் சாரால் ஒரு நடிகையாக வளர்ச்சி அடைந்துள்ளேன். அவர் மிகவும் அன்பானவர், ஜாலியானவர் என்றார்.

எல்லி அவ்ரம் ஸ்வீடனை சேர்ந்தவர். நடிப்பு ஆசையில் இந்தியாவுக்கு வந்தவர், மும்பையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமைகாட், மறுபடியுமா?: கவலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.