கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வாயில் முன்பு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மோதிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மருத்துவமனை வளாகத்திற்குள் ஆம்புலன்ஸை கூட நிறுத்த இடம் இல்லாத அளவுக்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும், மருத்துவமனையின் சுற்றுச்சுவரை ஒட்டி பல ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நோயாளி ஒருவரை ஏற்றி வந்த ஒரு வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவமனை வளாகத்திற்குள் வாகனத்தை கொண்டு செல்ல இடம் உள்ளதா என பார்க்க சென்றதாகவும், அப்போது எதிரில் இருந்து வந்த மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர், பிரேக் அடிப்பதற்கு பதிலாக கவனக்குறைவாக ஆக்ஸில்ரேட்டரை அழுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் மோதியதில் நின்றுக்கொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸ் பின்னோக்கி நகர்ந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதி நின்றது.
அதே நேரம் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் ஓரமாக இருந்த கடையில் நின்றுக்கொண்டிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.