சென்னை:
தஞ்சை, ஈரோட்டில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து சொகுசு பங்களா, அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலத்தை கணக்கிடவும், ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.