புதுடில்லி : ”ஆசியாவை அச்சுறுத்தும் உக்ரைன் போரை நிறுத்தி, துாதரக ரீதியில் சமரச பேச்சு நடத்த வேண்டும்,” என, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா சார்பில் டில்லியில் நேற்று நடந்த ஏழாவது ‘ரெய்சினா’ மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று உக்ரைன் போர் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த போரால் ஆசியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள், உணவுப் பொருள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே, போரை நிறுத்தி துாதரக ரீதியில் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் வேண்டுகோள். அதற்காகவே நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில், 90 நாடுகளைச் சேர்ந்த, 210க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
புதுடில்லி : ”ஆசியாவை அச்சுறுத்தும் உக்ரைன் போரை நிறுத்தி, துாதரக ரீதியில் சமரச பேச்சு நடத்த வேண்டும்,” என, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.இந்தியா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.